கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. இலங்கையில் சிக்கி தவிக்கும் 2000 இந்தியர்கள்.. நாடு திரும்புவதில் சிக்கல்!

கொரோனா பாதிப்பு காரணமாக 2000 இந்தியர்கள் இலங்கையில் சிக்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

கொழும்பு: கொரோனா பாதிப்பு காரணமாக 2000 இந்தியர்கள் இலங்கையில் சிக்கி உள்ளனர். இலங்கையில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    கொரோனா வைரஸால் உலகம் முழுக்க பல நாடுகள் தொடங்கி சிறு சிறு தீவுகள் வரை பாதிக்கப்பட்டு உள்ளது.கொரோனா காரணமாக இலங்கையில் மொத்தம் 104 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 200 பேர் வீட்டிற்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்..

    Coronavirus: 2000 Indians stranded in Sri Lanka including 16900 foreigners

    சீன பயணி ஒருவர் மூலம் இலங்கையில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அவர் குணப்படுத்தப்பட்டு தற்போது சீனா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பொருளாதாரமும், சுற்றுலா துறையும் மிக மோசமாக பாதிப்படைந்து உள்ளது. இதனால் அங்கு கடுமையாக கட்டுப்பாடுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வெளிநாடு செல்லும் விமானங்கள் இப்போதும் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் இந்தியாவை சேர்ந்த 2000 பேர் சிக்கி உள்ளனர். மொத்தமாக இந்தியர்களையும் சேர்ந்து 16900 வெளிநாட்டு மக்கள் இலங்கையில் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு விமானம், கப்பல் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சீனர்கள் 2167 பேர் அங்கு சிக்கி உள்ளனர்.

    இந்தியாவில் வெளிநாட்டு விமான போக்குவரத்து ஏப்ரல் 14 வரை தடை செய்யப்பட்டு இருப்பதால், அவர்களால் இந்தியாவிற்கும் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: 2000 Indians stranded in Sri Lanka including 16900 foreigners so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X