கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா எதிரொலி: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: கொரோனா தாக்கத்தால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து உலகின் 160 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது. இத்தாலி, ஈரானைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளிலும் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

Coronavirus: Srilanka Parliament election will not be held on April 25

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170 ஐ தாண்டியுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோல் இலங்கையிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் 50 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருந்தது.

கொரோனா பீதி - திருப்பதி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் பெரிய கோவில்களின் கள நிலவரம்கொரோனா பீதி - திருப்பதி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் பெரிய கோவில்களின் கள நிலவரம்

தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் தேர்தலை ஒத்திவைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதனை ஏற்று ஏப்ரல் 25-ந் தேதி இலங்கையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Ahead of Coronavirus impact, Srilanka Parliament election will not be held on April 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X