கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - அமோக வெற்றி முகத்தில் ராஜபக்சே கட்சி

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.

இலங்கையில் 196 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. மாலை 5 மணிவரையில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்தது.

Counting of votes for parliamentary elections in Sri Lanka begins

ஒருசில இடங்களில்தான் சிறிய அளவிலான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. மாலை 5 மணிவரை மொத்தம் 71% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகலில்தான் தபால் வாக்குகள் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல தொகுதிகளில் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதலிடத்தில் இருந்து வருகிறது.

2-வது இடத்தில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் 3-வது இடத்தில் ஜேவிபி கூட்டணியின் மக்கள் சக்தியும் 4-வது இடத்தில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியும் உள்ளன.

இதுவரை வெளியான முடிவுகள்:

காலி தொகுதி:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27535
ஐக்கிய மக்கள் சக்தி - 18706
தேசிய மக்கள் சக்தி -4380
ஐக்கிய தேசிய கட்சி - 3930

அம்பலாங்கொட

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 39142
ஐக்கிய மக்கள் சக்தி - 8202
தேசிய மக்கள் சக்தி - 2321
ஐக்கிய தேசிய கட்சி - 1,242

தெவிநுவர

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 40,143
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி - 9009
தேசிய மக்கள் சக்தி கட்சி - 4196
ஐக்கிய தேசிய கட்சி - 517

காலி - ரத்தகம

ஸ்ரீ.பொ.பெ.- 38,904
ஐ.ம.ச. - 8,596
தே.ம.ச.- 1,993
ஐ.தே.க. - 1,644

மாத்தறை

ஸ்ரீ.பொ.பெ.- 20,275
தே.ம.ச.- 3,149
ஐ.ம.ச. - 3,078
ஐ.தே.க. - 536

காலி - ஹபரதுவ

ஸ்ரீ.பொ.பெ.- 42,497
ஐ.ம.ச. - 8,628
தே.ம.ச.- 2,349
ஐ.தே.க. - 1,332

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொகுதி (தபால்)

டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி- 6,369
சம்பந்தனின் தமிழரசு கட்சி - 4,412

யாழ்ப்பாணம் தொகுதி

தமிழரசு கட்சி - 7,634
டக்ளஸின் ஈபிடிபி - 5,545
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்- 4,642

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 4308
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2771
ஐக்கிய மக்கள் சக்தி - 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 736
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 602
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 596

திருகோணமலை மாவட்டம் சேருவல

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34035
ஐக்கிய மக்கள் சக்தி -13117
இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 4723
தேசிய மக்கள் சக்தி -992
ஐக்கிய தேசிய கட்சி -581

மொனராகலை - தபால் வாக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15440
ஐக்கிய மக்கள் சக்தி - 3849
தேசிய மக்கள் சக்தி -1487
ஐக்கிய தேசிய கட்சி - 448

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு

தமிழ் அரசு கட்சி - 22,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,307
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி - 6,087
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,472
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 2,155
தமிழர் சமூக ஜனநாயக கட்சி - 1,690

பதுளை மாவட்டம் ஊவா பரணகம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 29713
ஐக்கிய மக்கள் சக்தி - 12717
தேசிய மக்கள் சக்தி -1431
ஐக்கிய தேசிய கட்சி -1392

மாத்தறை மாவட்ட கம்புருப்பிட்டிய

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 45,783
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி - 7,512
தேசிய மக்கள் சக்தி கட்சி - 3,749
ஐக்கிய தேசிய கட்சி - 614

English summary
In Sri Lanka, counting of votes for the parliamentary elections has begun at 77 counting centres across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X