கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குண்டுவெடிப்பு குறித்து இந்தியா எச்சரித்தும் அலட்சியமாக இருந்துவிட்டோமே.. பிரதமர் ரணில் வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - அதிபர் சிறிசேனா அறிவிப்பு- வீடியோ

    கொழும்பு: குண்டுவெடிப்பு நிகழ போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்து விட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்தார்.

    இலங்கையில் ஏசு உயிர்பிக்கும் நிகழ்ச்சியான ஈஸ்டர் தினத்தையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 தேவாலயங்கள், 4 தனியார் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலால் 290 பேர் பலியாகிவிட்டனர்.

    மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கொழும்பு.. சாப்பிடுவதற்கு கியூவில் நிற்பது போல.. உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதிகொழும்பு.. சாப்பிடுவதற்கு கியூவில் நிற்பது போல.. உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதி

    தீவிரவாதிகள்

    தீவிரவாதிகள்

    இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் அதாவது 4-ஆம் தேதியே இந்திய உளவுத் துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது. இந்திய உளவுத் துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில் கொழும்பில் தீவிரவாதிகள் நடத்திய இடங்கள் இடம்பெற்றிருந்தன.

    10 நாட்களுக்கு முன்பு

    10 நாட்களுக்கு முன்பு

    இந்தியாவின் இந்த எச்சரிக்கையை இலங்கை அரசியல் தலைவர்களும் ராணுவ தளபதிகளும் அலட்சியமாக கருதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் இலங்கை போலீஸ் தலைவர் பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கும் முன்பு ஒரு கடிதம் எழுதினார்.

    தகவல்

    தகவல்

    அதில் கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலையும் போலீஸார் கருத்தில் கொள்ளவில்லை.

    கவனக்குறைவு

    கவனக்குறைவு

    இந்த நிலையில் இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் கொழும்பில் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறியிருந்தும் நாங்கள் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்துவிட்டோம்.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    கிடைக்கப் பெற்ற போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம். இத்தகைய உளவுத் துறையின் எச்சரிக்கையை அசட்டை செய்யாமல் இருந்திருந்தால் பெரும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் வேதனை தெரிவித்தார்.

    English summary
    Despite India gave specific intelligence inputs to Srilanka about attack, We failed to take necessary precautionary steps, PM Ranil Wickremesinghe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X