India
  • search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரவலம்! உயிரிழந்தவர்களையும் விட்டுவைக்காத இலங்கை பொருளாதாரம்! சடலங்களை எரிக்கக்கூட எரிபொருள் இல்லை

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, இப்போது அங்கு உயிரிழந்தவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு வீதியில் இறங்கிய பொதுமக்கள் இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இலங்கையில் இனி கூப்பன் கொடுத்தால்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும்... அலாரம் அடிக்கும் பிரதமர் ரணில் இலங்கையில் இனி கூப்பன் கொடுத்தால்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும்... அலாரம் அடிக்கும் பிரதமர் ரணில்

இலங்கை

இலங்கை

அதைத் தொடர்ந்து உலக நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியது. இருப்பினும், இந்தியா தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்குப் பெரியளவில் உதவவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாகச் சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு நாளுக்கு நாள் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

 எரிபொருள் பற்றாக்குறை

எரிபொருள் பற்றாக்குறை

குறிப்பாக, அங்கு எரிபொருள் பற்றாக்குறை பூதாகரமாகி உள்ளது. இதைச் சமாளிக்க எரிபொருளுக்கும் அந்நாட்டு அரசு ரேசன் முறையைக் கொண்டு வர உள்ளது. இப்போது அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி, அங்கு உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, இறந்தவர்களுக்கும் கூட பெரும் இன்னலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆம்! அங்கு உயிரிழந்தவர்களின் உடலை எரிக்கக் கூட போதுமான எரிபொருள் இல்லை என்று கூறப்படுகிறது.

 இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தச் சுடுகாட்டிற்கு வருபவர்கள் கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். நிலைமையைச் சமாளிக்க உயிரிழக்கும் பௌத்தர்களின் தகனத்திற்காக இலங்கை அரசே எரிபொருள் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விடுப்பு

விடுப்பு

அதேபோல அங்கு உணவு பற்றாக்குறையை மிக மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவை வளர்ப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கி உள்ளது. இதற்காக அங்குள்ள அரசு அதிகாரிகள் 4 நாட்கள் மட்டுமே பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள்

பள்ளிகள்

உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைக் கூட ஆடம்பரமான ஒன்றாகவே இலங்கை மக்கள் கருதுகின்றனர். ஒரு நாளைக்கு இரு வேலை உணவுடன் வாழ்க்கையை நடத்துவதே அவர்களின் முக்கிய இலக்காக உள்ளதால் பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். இந்தச் சூழலில் இலங்கைக்கு உதவும் வகையில் மற்றொரு கடனை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது ஜூலை முதல் நான்கு மாதங்களுக்கு எரிபொருள் வாங்கப் பயன்படும்.

 இலங்கை நிலை

இலங்கை நிலை

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது அரசியல் வாழ்க்கையில் மிகக் கடினமான போராட்டத்தில் உள்ளார். இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு உலக வங்கி 700 மில்லியன் டாலர் கடனை வழங்கியிருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால் மட்டுமே நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Deepening economic crisis, Sri Lanka does not have enough gas even to run crematoriums: (இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான எரிபொருள் பாதிப்பு) Fuel crisis in Sri Lanka even affects the death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X