கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் ஹெராயின் கடத்தலில் தப்பித்த பூனை சிக்கியது! சிறைக்கு தானாக திரும்பி வந்ததாக தகவல்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ஹெராயின் கடத்தல் வழக்கில் தப்பித்த பூனை சிக்கிவிட்டதாம். வெலிக்கடை சிறையிலிருந்து தப்பிய பூனை தாமே சிறைக்கு திரும்பிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன்கள், போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவது போலீசாருக்கு தலைவலியாக இருந்தது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சிறை மதில்களில் இருந்து கோட் வேர்டுடன் போதை பொருள் பொட்டலங்கள் வீசப்படுவது தொடர் கதையானது. இதனையும் ஒருவழியாக ஒடுக்கியது இலங்கை போலீஸ்.

எம்மாம் பெரிய காது.. அப்படியே ஆன்டெனா மாதிரியே.. நீட்டி மடக்க 20 தசைகள் உதவுதாமே.. செம உஷார் பூனை! எம்மாம் பெரிய காது.. அப்படியே ஆன்டெனா மாதிரியே.. நீட்டி மடக்க 20 தசைகள் உதவுதாமே.. செம உஷார் பூனை!

கடத்தலில் பூனைகள்

கடத்தலில் பூனைகள்

ஆனாலும் சிறை கைதிகளுக்கு போதை பொருட்கள் தாராளமாக கிடைத்து வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பூனைகள் மூலம் ஹெராயின் போதை பொருட்கள், சிம் கார்டுகள் சிறைக்குள் அனுப்பி வைக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

போதை பொருள் கடத்திய பூனை

போதை பொருள் கடத்திய பூனை

பின்னர் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறை அருகே கழுத்தில் பொட்டலம் ஒன்றுடன் திரிந்து கொண்டிருந்த பூனை சிக்கியது. அந்த பூனையின் கழுத்தில் ஹெராயின் போதை பொருள், சிம் கார்டுகள் இருந்ததும் அதில் சங்கேத குறியீடு எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

சிறையில் இருந்து தப்பிய பூனை

சிறையில் இருந்து தப்பிய பூனை

ஆகையால் ஹெராயினை கடத்தி வந்த பூனையை வெலிக்கடை சிறைக்குள் பூட்டி அடைத்து வைத்தனர். ஆனால் திடீரென இந்த பூனை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூனையை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் வெலிக்கடை சிறைக்குள் பூனை ஒன்று சுதந்திரமாக திரிவது தெரியவந்தது.

தப்பிய பூனை திரும்பி வந்தது

தப்பிய பூனை திரும்பி வந்தது

சிறை அதிகாரிகள் அந்த பூனையை பிடித்து பார்த்த போது, சிறையில் இருந்து தப்பியதும் அதுதான் என்பது உறுதியானது. சிறை அறையில் இருந்து தப்பிய பூனை தாமாகவே மீண்டும் சிறை வளாகத்துக்கு வந்துவிட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

English summary
A cat returned to Srilanka Prison which was earlier detained for allegedly trying to smuggle drugs and cell phone SIM cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X