கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோத்தபய ராஜபக்சே அதிபரானதால் தமிழர்கள் அச்சமடைய வேண்டாம்.. இலங்கை முன்னாள் எம்பி கருணா

Google Oneindia Tamil News

Recommended Video

    Gotabaya Rajapaksa’s victory in Sri Lanka: It’s a sad day for Tamils, Vaiko says

    கொழும்பு: கோத்தபய ராஜபக்சே அதிபரானதால் தமிழர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என இலங்கையின் முன்னாள் எம்பி கருணா தெரிவித்தார்.

    இலங்கையில் கடந்த சனிக்கிழமை அதிபருக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜ்பக்சேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இதில் 52 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கோத்தபய பெற்று வெற்றி பெற்றார். சஜித்தை விட 13 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றார். கோத்தபயவுக்கு சிங்கள மக்களின் ஆதரவும், சஜித்துக்கு தமிழர்களின் ஆதரவும் கிடைத்தன.

    முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்!முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்!

    கொடூரம்

    கொடூரம்

    ராஜபக்சே குடும்பத்திலிருந்து ஒருவர் மீண்டும் அதிபரானதால் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இறுதிப்போரில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் கண் முன் நிழலாடுகின்றன.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகளும் அதிபர் தேர்தல் முடிவுகளை எண்ணி கவலை அடைந்துள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு எத்தகைய நிலையில் இருக்குமோ என்ற வேதனையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

    கோத்தபய

    கோத்தபய

    இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து அந்நாட்டின் முன்னாள் எம்பி கருணா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வவுனியாவில் கூறுகையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் வாக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு கோத்தபயவுக்கு கிடைக்கவில்லை.

    கோரிக்கைகள்

    கோரிக்கைகள்

    இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான பிரச்சாரமே காரணம். அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழர்களின் கோரிக்கைகளை அதிபர் கோத்தபய நிறைவேற்றுவார்.

    கோத்தபய நிறைவேற்றுவார்

    கோத்தபய நிறைவேற்றுவார்

    இலங்கையில் கோத்தபய வெற்றி பெற்றதால் தமிழர்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. இங்கு அச்சமற்ற சூழலை கோத்தபய ராஜபக்சே ஏற்படுத்துவார் என கருணா கூறியுள்ளார்.

    English summary
    Srilanka's Ex MP Karuna says that Tamils in Srilanka wont be afraid of Gotabaya Rajapaksa became President of Srilanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X