கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகையே உலுக்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. மூளையாக செயல்பட்ட மூவர் சுட்டுக் கொலை.. காவல் துறை

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் நடந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

    கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட 3 பேர் பாதுகாப்பு படையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    தலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கை விசாரிக்கட்டும்.. பின் சதியை விசாரிக்கலாம்.. பட்நாயக் முடிவு! தலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கை விசாரிக்கட்டும்.. பின் சதியை விசாரிக்கலாம்.. பட்நாயக் முடிவு!

    தேடுதல் வேட்டை

    தேடுதல் வேட்டை

    இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 160 தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என்ற உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதி தேடுதல் வேட்டை நிகழ்ந்து வருகிறது.

    சம்பவ இடம்

    சம்பவ இடம்

    கல்முனை அருகே ஒரு வீட்டில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்துக்கு நேற்று முன் தினம் இரவு சென்றனர்.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டை நடத்தினர். இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கிளால் சுட்டனர்.

    சுட்டுக் கொலை

    சுட்டுக் கொலை

    இதில் 15 பேர் பலியாகிவிட்டனர். 15 பேரில் 4 முதல் 6 பேர் வரை மனிதவெடிகுண்டுகளாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட வீடியோவில் இருக்கும் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மூவர்

    மூவர்

    இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்களான தந்தை முகமது ஹாசிம் அவரது இரு மகன்கள் ஜைனி ஹாசிம், ரில்வான் ஹாசிம் ஆகியோர் இந்த மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

    English summary
    Zainee Hashim, Rilwan Hashim and their father Mohamed Hashim who were master mind for Srilanka Bomb blast killed in Gun fight near Kalmunai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X