கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு!

இலங்கையில் நடந்த உள்நாட்டு இறுதி போரில் காணாமல் போன தமிழர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டு இறுதி போரில் காணாமல் போன தமிழர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நடத்திய இந்த போரினால் பல லட்சம் தமிழர்கள் வீடு இழந்தனர். விடுதலை புலிகளை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

Find the 10 thousands of Tamils who gone missing in Sri Lankan war order President Gotabaya

இதில் நிறைய போர் குற்றங்கள் நடந்ததாக இப்போதும் புகார் உள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போரில் அதிகாரபூர்வமாக 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் கணக்கில் இல்லாமல் பலர் இதில் பலியாகி இருக்கலாம்.

இந்த போரை முன்னின்று நடத்திய ராணுவ தளபதியான கோத்தபய ராஜபக்சேதான் தற்போது அந்நாட்டு அதிபராக இருக்கிறார். இந்த போரில் பல லட்சம் பேர் காணாமல் போனார்கள். இவர்களை கண்டுபிடித்து தரும்படி, அந்நாட்டு தமிழர்கள் இப்போதும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இப்படி காணாமல் போனவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் இலங்கை இறுதி போரின் போது காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்து இருக்கலாம் என கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.

ஐ.நா. சபை அதிகாரி லீலாதேவி அனந்த நடராஜாவை சந்தித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த தகவலை தெரிவித்தார். இது உறவினர்களை காணாமல் தவிக்கும் தமிழர்களை கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு அதிபர் இப்படி பேச கூடாது. காணாமல் போனவர்களை இறந்துவிட்டார்கள் என்று கூற கூடாது, அதிபர் எப்படி இதை உறுதியாக சொல்கிறார் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

போதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா? போதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா?

இந்த நிலையில், திடீர் திருப்பமாக, இலங்கையில் நடந்த உள்நாட்டு இறுதி போரில் காணாமல் போன தமிழர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். மாயமானவர்கள் குறித்து அறிந்து கொள்ள விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆராய புதிய குழு அமைக்கப்படும். அவர்கள் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பர் . மாயமானவர்கள் குறித்து தீவிர விசாரணைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் . அதற்கு பிறகே அவர்களது குடும்பத்தினரிடம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Find the 10 thousands of Tamils who gone missing in Sri Lankan war order President Gotabaya Rajapaksa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X