கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள்! டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி!!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 4 தமிழர்களும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சேவி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்.

Five Rajapaksa family members in Srianka Ministry

இதனைத் தொடர்ந்து இன்று கொழும்பில் அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 28 கேபினட் மற்றும் 40 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சராக அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே ஆகியோருடன் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் இன்னொரு சகோதரர் சமல் ராஜபக்சே, சமல் ராஜபக்சே மகன் சசிந்திர ராஜபக்சே ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

"செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்" தலைப்பில் இணைய கருத்தரங்கு

மகிந்த ராஜபக்சேவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க என்பவர் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அல்லாமல் 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான், அலி சப்ரி ஆகிய தமிழர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

English summary
Five members of the Rajapaksa family got ministerial Posts in Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X