கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோத்தபாயவின் குடியுரிமைக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை- கொழும்பில் உச்சகட்ட பதற்றம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சேவின் குடியுரிமைக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை நடைபெற இருப்பதால் கொழும்பில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார். அதேநேரத்தில் கோத்தபாய அமெரிக்கா குடியுரிமை பெற்றவர் என்பதால் இலங்கை குடியுரிமையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளர்கள் காமினி வியாங்கொட, சந்திரகுப்த தெனுவர ஆகியோர் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

Gotabaya Rajapaksa Faces Test Over Nationality issue

இம்மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனால் கோத்தபாய ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்கிற கேள்விக்குறி எழுந்தது.

சமூக வலைதளங்களில் ஆதார் எண்? சென்னை ஹைகோர்ட் வழக்கில் இணைந்த மஹூவா மொய்த்ரா எம்.பி.சமூக வலைதளங்களில் ஆதார் எண்? சென்னை ஹைகோர்ட் வழக்கில் இணைந்த மஹூவா மொய்த்ரா எம்.பி.

இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தால் கோத்தபாய ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால் கொழும்பில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இதனால் கொழும்பில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
Srilanka Presidential Candidate Gotabaya Rajapaksa is facing test over nationality issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X