கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார்.

Gotabaya Rajapaksa named Mahinda Rajapaksa as New PM

இந்நிலையில் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்

ஆனாலும் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன். அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் நாளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமாவை தெரிவிக்கிறேன் என்றார். இதனிடையே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை, அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.

மேலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் தனி கட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
Sri Lankan President Gotabaya Rajapaksa named his elder brother Mahinda Rajapaksa as the new prime minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X