கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழல் முறைகேடு வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விடுவிப்பு- பாஸ்போர்ட் ஒப்படைப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: டி.ஏ. ராஜபக்சே அருங்காட்சியகம் அமைப்பதில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது பாஸ்போர்ட்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சேக்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்சேவுக்கு அருங்காட்சியகம் அமைக்க மகிந்த ராஜபக்சே காலத்தில் முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் மோசடி நடைபெற்றது என்பது வழக்கு.

Gotabaya Rajapaksa released from Corruption case

கோத்தபாய ராஜபக்சே மீது தொடரப்பட்ட இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் கோத்தபாயவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டிருந்தது.

பெங்களூரில் 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. தலைநகரில் வெற்றி யாருக்கு? தாறுமாறு எதிர்பார்ப்புபெங்களூரில் 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. தலைநகரில் வெற்றி யாருக்கு? தாறுமாறு எதிர்பார்ப்பு

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றார் கோத்தபாய ராஜபக்சே. இதனைத் தொடர்ந்து இந்த ஊழல் வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் கோத்தபாயவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

English summary
Srilanka's new President Gotabaya Rajapaksa released from D A Rajapaksa museum corruption case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X