கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு காரணமான தவ்ஹீத் ஜமாத்தை வளர்த்தது கோத்தபாய.. பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு இலவசமாக நிலம் வழங்கியவர் கோத்தபாய ராஜபக்சே; இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கற்பிக்க 200 பள்ளிகளை கட்டிக் கொடுக்கவும் கோத்தபாய ராஜபக்சே உதவியதாக பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவே தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் ராஜபக்சே சகோதரர்களே குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவும் இந்த நாசகார தாக்குதலுக்கு இருக்கின்றன என்பதும் குற்றச்சாட்டு.

Gotabaya supported NTJ, says UNP MP Thushara Indunil

இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. துசார இந்துநில் கூறியதாவது:

இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களை உருவாக்க முயற்சித்தவர் கோத்தபாய ராஜபக்சே. முஸ்லிம்களை பிளவுபடுத்தும் வகையில்தான் இந்த நடவடிக்கையை கோத்தபாய ராஜபக்சே மேற்கொண்டார்.

கொழும்பு மாவத்தை அருகே தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு நிலம் கொடுத்து தலைமை அலுவலகம் அமைக்க உதவியது கோத்தபாய ராஜபக்சே. இஸ்லாமிய அடிப்படைவாதங்களை கற்பிக்க 200 பள்ளிகளை உருவாக்கியதும் கோத்தபாய என பசில் ராஜபக்சேவும் கூறியுள்ளார்.

 இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது

இலங்கையில் தமிழ், முஸ்லிம் , சிங்கள இனங்களுக்கு இடையேயான மோதலை கூர்மைப்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் அடைய விரும்பியவர்கள் ராஜபக்சே சகோதரர்கள்.

இவ்வாறு துசார இந்து நில் கூறினார்.

English summary
UNP MP Thushara Indunil said former Defence Secretary Gotabaya Rajapaksa had supported the setting up of the National Thowheed Jamath head office in Colombo for the extremist group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X