கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் பல இடங்களில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

    கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரின் பணிமனையில் ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தின்போது அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இிந்த நிலையில், காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும்,தீவிர விசாரணை மற்றும் வாகன தணிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    Guns seized from Sri Lanka Eastern Province governor Hizbulla office

    இப்படியான சோதனையின்போது, காத்தான்குடியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் பணிமனையில் ரி-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    இது தொடர்பாக துப்பாக்கிகளை வைத்து இருந்தார்கள் எனும் சந்தேககத்தின் பேரில், இருவரை கைது செய்து உள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்து உள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்து உள்ளது.

    இதனிடையே, தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும், எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    என் தம்பியைவா தள்ளி விட்டே.. உன் தம்பியை கொன்னுட்டேன் பாரு.. அதிர வைத்த டெல்லி சிறுவன்என் தம்பியைவா தள்ளி விட்டே.. உன் தம்பியை கொன்னுட்டேன் பாரு.. அதிர வைத்த டெல்லி சிறுவன்

    அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இன்று எனது காத்தான்குடி அலுவலகம் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, எனது பாதுகாப்புக்கு பொறுப்பான போலீஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும் காத்தான்குடி போலீசாரும், எனது அலுவலகத்தின் பின்னால் தங்கியிருந்த அறையிலிருந்து பணி நிமித்தமாக காத்தான்குடி போலீசாரால் வழங்கப்பட்டு பாதுகாப்பிற்கு பயன்படுத்துகின்ற சுமார் 40 துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

    இது உத்தியோகபூர்வமாக பாதுகாப்பிற்காக போலீசாருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் காத்தான்குடி போலீஸ் நிலையத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபடும் வரை அலுவலகத்திற்கு பொறுப்பான 2 சகோதரர்களையும் காத்தான்குடி போலீசில் கைது செய்து வைத்துள்ளார்களே தவிர இந்த துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.

    இது பணி தொடர்பாக போலீசாருக்கு வழங்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான துப்பாக்கி ரவைகள் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Guns seized from Sri Lanka Eastern Province governor Hizbulla office, but he explained about the raids.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X