கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் தொடங்கியது குதிரை பேரம்.. எம்பிக்களை இழுக்க ராஜபக்சே மும்முரம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் பெரும்பான்மை நிரூபிப்பதற்காக, எம்பிக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் தொடங்கியுள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, திடீரென நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேன.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் தனக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால் பிரதமராக நானே இருக்கிறேன் என்று அறிவித்தார் ரணில் விக்ரமசிங்க.

நாடாளுமன்றம் முடக்கம்

நாடாளுமன்றம் முடக்கம்

இந்த உண்மையை அறிந்து கொண்ட மைத்திரிபால சிறிசேனா உடனடியாக நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தார். நாடாளுமன்றம் நவம்பர் 16-ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது.

ராஜபக்சே ஆதரவுக்கு சதி

ராஜபக்சே ஆதரவுக்கு சதி

இந்த முடக்கம் மற்றும் இவ்வளவு நீண்ட கால இடைவெளி என்பது மஹிந்தா ராஜபக்சே தனது ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சதி தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்குதான் இப்போது அதிகப்படியான எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

குதிரை பேரம்

குதிரை பேரம்

இது போக தமிழ் கட்சிகள் உள்ளிட்ட சிறு கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து ஆட்சியை தக்க வைக்கலாம் என்று நினைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் இந்த காலகட்டத்தில் குதிரை பேரம் மூலமாகவோ, மிரட்டியோ ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் மஹிந்தா ராஜபக்சே.

ராஜபக்சே நம்பிக்கை

ராஜபக்சே நம்பிக்கை

இப்போதைக்கு தனக்கு 120 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக ராஜபக்சே கூறியுள்ளார். குதிரை பேரம் நடக்காமல் இப்படி கூறியிருக்க முடியாது என்கிறார்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்கள்.

{document1}

English summary
The next two weeks will be crucial for Sri Lanka, with attempts at horse-trading and assertions of political loyalty amid uncertainty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X