கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியே வந்த பூனைக்குட்டி.. "இஸ்லாமிய பயங்கரவாத்தை" ஒழிக்க அதிபர் தேர்தல் போட்டியாம்: கோத்தபாய

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாம் 100% போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாலர் கோத்தபாய ராஜபக்சே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்தாலும் அரசியல் தலைவர்களுக்கான தொடர்புகள் குறித்த சந்தேகம் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக ராஜபக்சே குடும்பத்தினருக்கு அல்லது அவர்களுக்கு ஆதரவான வெளிநாடுகளுக்கு இக் குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

i will run for president tackle radical islam says gotabaya

இதற்கேற்ப, ராஜபக்சே அரசாங்கத்தை இந்தியா மீண்டும் இலங்கையில் உருவாக்க வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அதிபர் தேர்தல் குறித்து மவுனத்தைக் கலைத்துள்ளார் கோத்தபாய ராஜபக்சே.

இது தொடர்பாக கோத்தபாய கூறுகையில், அமெரிக்காவில் என் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்ட வழக்கு.

எத்தனை தடைகள் வந்தாலும் அதிபர் தேர்தலில் தாம் நிச்சயம் போட்டியிடுவேன். அது 100% உறுதி. இஸ்லாமிய பயங்கரவாதத்தை இலங்கையில் ஊடுருவ விட்டதற்கு அரசுதான் பொறுப்பேற்பு.

 இலங்கையில் பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் - ராணுவத்துடன் மோதல்- குவியல் குவியலாக சடலங்கள்! இலங்கையில் பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் - ராணுவத்துடன் மோதல்- குவியல் குவியலாக சடலங்கள்!

நான் பாதுகாப்புத் துறை செயலராக இருந்த போது அரபி மொழி தெரிந்த அதிகாரிகளும் புலனாய்வுத்துறையில் இருந்தனர். புலனாய்வுத்துறை நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தது. அப்புலனாய்வு அமைப்பை கலைத்ததுதான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊடுருவ காரணமாக அமைந்தது என கூறியுள்ளார் கோத்தபாய.

பூனைக்குட்டி வெளியே வந்தது!

English summary
Gothabaya Rajapakse has said that He will surely contest in Presidential election to weed out "Islamic Terrorism".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X