கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்பத்திலும், துன்பத்திலும் இலங்கையுடன் நிற்போம்.. அறிவித்த இந்தியா.. 10 டன் மருந்துகளை வழங்கியது

Google Oneindia Tamil News

கொழும்பு: COVID-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக இந்தியா 10 டன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்ட நிலையில், ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் இவற்றை இந்தியா, இலங்கைக்கு கொண்டு வந்தது.

India gifts 10-ton consignment of medicines to Sri Lanka

இந்திய தூதரகம் இதுகுறித்த ஒரு அறிக்கையில், இலங்கையுடன் "மழையிலும் வெயிலிலும்" இணைந்து நிற்கும் இந்தியா. இந்தியாவின் உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு இது.

சொந்த உள்நாட்டு சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியா தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது.

India gifts 10-ton consignment of medicines to Sri Lanka

இந்தியப் பிரதமரின் முயற்சியின் பேரில், மார்ச் 15ம் தேதியன்று அன்று COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க சார்க் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா சார்க் நாடுகளின், கோவிட் -19 அவசர நிதிக்கு 10 மில்லியன் டாலரை வழங்கியது. அதைத் தொடர்ந்து, சார்க் நாடுகளில் சுகாதார நிபுணர்களின் வீடியோ கான்பரன்ஸ் மார்ச் 26 அன்று நடைபெற்றது. இந்திய சுகாதார அமைச்சகம் சார்க் நாடுகளில் உள்ள சுகாதார நிபுணர்களுக்கான ஆன்லைன் பயிற்சி அமர்வுகளையும் வழங்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India gifts 10-ton consignment of medicines to Sri Lanka

குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள சார்க் பேரிடர் மேலாண்மை மையம் (எஸ்.டி.எம்.சி) சார்க் உறுப்பு நாடுகளில் COVID-19 நிலைமை தொடர்பான பிரத்யேக வலைப்பக்கத்தையும் உருவாக்கியுள்ளது.

https://www.covid19-sdmc.org/

English summary
India yesterday gifted a 10-ton consignment of essential lifesaving medicines to the Government of Sri Lanka, to aid in countering the COVID-19 crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X