கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி- வீடியோ

    கொழும்பு: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட பிறகு, இலங்கையின் அதிகாரப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இந்தியாவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அந்த நாட்டின் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், வட மாகாணத்தில் தமிழர்களே அதிகம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஒடுக்குமுறைகள் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

    சம உரிமை கேட்டு, இலங்கையில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் கூட, இன்னும் இந்த பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

    கொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா!கொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா!

    கருத்துக்கள்

    கருத்துக்கள்

    இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தால், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தலையிடும் என்று தான் இத்தனை வருட காலமாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது இந்தியா காஷ்மீரில் அதிரடியாக நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது.

    ஒரே ஆட்சி

    ஒரே ஆட்சி

    இந்த நிலையில்தான், தற்போது சம்பிக ரணவக பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா ஒரே ஆட்சி என்ற நிலையை நோக்கி நகர்ந்து உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.

    அதிபர் ஆட்சி

    அதிபர் ஆட்சி

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்தியாவில் அதிபர் ஆட்சி நடைபெறுவது போன்ற சூழ்நிலை உள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வருகிறது.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    இந்தியாவில் முஸ்லீம் வெறுப்பு அதிகரிப்பதால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் கோபத்திற்கு உள்ளாவார்கள். இதன் காரணமாக இலங்கையின் வடமாகாண தமிழக அரசியலில் மற்றும் தெற்குப் பிராந்தியத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இலங்கையின் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இனிமேலும் இந்தியா பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    India has no moral right to talk about devolution of power after the annulment of privilege granted to Jammu and Kashmir, the country's minister Sampika Ranawaka said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X