கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : UNICEF South Asian Parliamentarian Conference

    கொழும்பு: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியதால் கொழும்பில் யுனிசெப் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறுவர்களுக்கான தெற்காசிய நாடாளுமன்ற அமர்வு விரைவாக முடிக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது உள்ளிட்டவைகளால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்புவதில் பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது.

    India slams Pakistan at Unicef conference in Colombo

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இப்பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியது. ஆனால் காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என கூறி இதர நாடுகள் பாகிஸ்தானின் குரலுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டன.

    அதேபோல் மாலத்தீவில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டிலும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் முன்வைத்தது. இதற்கு இந்தியா, மாலத்தீவு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருந்தார். ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையே என பாகிஸ்தான் சார்பாக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் பதிலடி கொடுத்துவிட்டார்.

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் யுனிசெப் சார்பில் சிறுவர்களுக்கான தெற்காசிய நாடாளுமன்ற தள அமர்வு நடைபெற்றது. இங்கும் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் பிரதிநிதிகள் எழுப்பினர்.

    பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்

    அதாவது ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது; இதனால் பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை என பாகிஸ்தான் பிரதிநிதி குற்றம்சாட்டினார்.

    இதற்கு இந்திய தரப்பில் ஆவேசமான பதிலடி தரப்பட்டது. ஆனாலும் பாகிஸ்தான் பிரதிநிதி அமைதிகாக்கவில்லை. இதையடுத்து இந்த அமர்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இருதரப்பு பதற்றத்தை தணிக்க கூட்டத்தை பாதியிலேயே முடித்து வைத்தார்.

    English summary
    Pakistani delegation participating at the UNICEF South Asian Parliamentarian Conference on Children Right's Convention in Colombo raked up the Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X