கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள்தான்.. இலங்கையில் 15 பேர் பலியான சம்பவம்.. ஐஎஸ் பொறுப்பேற்பு!

இலங்கையில் சைந்தாமருது என்று பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் நடந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

    கொழும்பு: இலங்கையில் சைந்தாமருது என்று பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

    இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்து ஒருவாரம் ஆகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இலங்கை தலைநகர் கொழும்பு இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    இலங்கையில் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

    குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்ததால் 2 இயக்கங்களுக்கு தடை.. இலங்கை நடவடிக்கை குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்ததால் 2 இயக்கங்களுக்கு தடை.. இலங்கை நடவடிக்கை

     வெள்ளிக்கிழமை என்ன நடந்தது

    வெள்ளிக்கிழமை என்ன நடந்தது

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கையின் சைந்தாமருது என்ற பகுதியில் ராணுவம் தீவிர சோதனையில் ஈடுப்பட்டது. அப்போது அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீடு ஒன்று கண்டுபிடிக்கப்ட்டது. அங்கு வெடிகுண்டுகள் மற்றும் தற்கொலை படை தாக்குதல் உடைகள் தயாரிக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

     தீவிரவாதிகள் தாக்குதல்

    தீவிரவாதிகள் தாக்குதல்

    இதையடுத்து அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே இதனால் கடுமையான மோதல் ஏற்பட்டது. சில தீவிரவாதிகள் ராணுவத்தை பார்த்ததும் அங்கிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் மொத்தம் 15 பேர் பலியானார்கள்.

     யார் அடையாளம்

    யார் அடையாளம்

    இதில் பலியான 6-7 பேர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதில் அனைவரின் உடலும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சாரான் ஹாசிமின் மனைவி மற்றும் குழந்தைகள் இந்த ராணுவத்தின் துப்பாக்கி சூடு தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

     ஐஎஸ் இயக்கம்

    ஐஎஸ் இயக்கம்

    தற்போது 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. அங்கு கொல்லப்பட்ட எல்லோரும் தங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அது தங்களுடைய வெடிகுண்டு முகாம்தான் என்று ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தன்னுடைய அமாக் இணைய பக்கம் மூலம் தெரிவித்துள்ளது.

    English summary
    IS claims responsibility for Sri Lanka's Friday night attack, which kills 15 people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X