இலங்கையை தாக்கும் முன் உறுதிமொழி எடுத்த தீவிரவாதிகள்.. ஐஎஸ் அமைப்பே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், தாக்குதலுக்கு முன்பு எடுத்துக்கொண்ட உறுதிமொழி குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள், தாக்குதலுக்கு முன்பு எடுத்துக்கொண்ட உறுதிமொழி குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதுகுறித்து வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கை ஓட்டலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. கொழும்பு விமான நிலையம் அருகே அதிர்ச்சி
யார் செய்தது
இந்த தாக்குதலுக்கு நேற்றுதான் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஐஎஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ அமாக் இணைய பக்கம் மூலமாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. சரியாக தாக்குதல் நடந்து 50 மணி நேரம் கழித்து ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
|
என்ன தாக்குதல்
இந்த நிலையில் நேற்று இந்த தாக்குதல் குறித்த சில அதிரடி வீடியோக்கள் வெளியானது. அதில் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச்சில் நடந்த தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் தீவிரவாதி என்று கருதப்படும் நபர் பெரிய பேக்குடன் தேவாலயத்திற்கு வருவது பதிவாகி உள்ளது.
ஐஎஸ் எப்படி
தற்போது அடுத்த திருப்பமாக ஐஎஸ் அமைப்பே இது தொடர்பாக அவர்கள் அமாக் இணைய பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் 6 பேர் மற்றும் 7வதாக அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ஆகியோர் அந்த வீடியோவில் இருக்கிறார்கள். இலங்கையில் தாக்குதல் நடத்தும் முன் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை எப்படி
இதில் இவர்கள் எல்லோரும் இலங்கை மீது தாக்குவது குறித்து உறுதிமொழி எடுக்கிறார்கள். இந்த வீடியோவில் மவுலி சக்ரான் ஹாசிம் என்ற தீவிரவாதியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாசிம்தான் இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.