கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஜே.வி.பி. வேட்பாளராக அக்கட்சித் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சஜித பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக களம் இறங்குகிறார்.

JVP announces Anura Kumara Dissanayake as presidential candidate

தமிழர் தரப்பு இன்னமும் எந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கொழும்பை அதிரவைக்கும் வகையில் ஜேவிபி கட்சி பிரமாண்ட பேரணியை நேற்று நடத்தியது.

இப்பேரணியில் லட்சக்கணக்கானோர் அணிதிரண்டனர். ஜேவிபிக்கு திரண்ட கூட்டமானது பிரதான 2 கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்ற இப்பேரணியில் அதிபர் தேர்தல் வேட்பாளராக கட்சித் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் தமது வேட்பாளரை ஜேவிபி நிறுத்தியுள்ளது. 1999-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நந்தன குணதிலகேவை வேட்பாளராக நிறுத்தியது ஜேவிபி. அத்தேர்தலில் ஜேவிபிக்கு 3-ம் இடம் கிடைத்தது.

அதன்பின்னர் 2005-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை ஜேவிபி ஆதரித்தது. 2010-ம் ஆண்டு பொதுவேட்பாளராக சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தந்தது ஜேவிபி. 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை ஜேவிபி முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் நிலவரம்- ஷேக்லா ரஷீத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை: ராணுவம் திட்டவட்ட மறுப்பு காஷ்மீர் நிலவரம்- ஷேக்லா ரஷீத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை: ராணுவம் திட்டவட்ட மறுப்பு

English summary
JVP has announced that its president Anura Kumara Dissanayake as Presidential candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X