கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபாகரனை கொன்றதாக அறிவித்த படைப்பிரிவின் தளபதி கமால் குணரத்ன இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிபராக கோத்தபாய ராஜபக்சே இன்று பதவி ஏற்றார். மகிந்த ராஜபக்சே அதிபராக பதவி வகித்த காலத்தில் கோத்தபாய ராஜபக்சேதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.

Kamal Gunaratne to become Defence Secretary

அப்போதுதான் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சே, அதிபராக பதவி ஏற்ற பின்னர் நியமித்த முதலாவது நியமனம் இது.

Kamal Gunaratne to become Defence Secretary

 45 நிமிட யுத்தத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது? மாஜி சிங்கள தளபதி கமால் குணரத்ன பரபரப்புத் தகவல்! 45 நிமிட யுத்தத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது? மாஜி சிங்கள தளபதி கமால் குணரத்ன பரபரப்புத் தகவல்!

2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் 53-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர் கமால் குணரத்ன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவுதான் கொன்றதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் இந்த கமால் குணரத்ன.

மேலும் நந்திக் கடலுக்கான பாதை என்ற நூலையும் கமால் குணரத்ன எழுதியுள்ளார்.

English summary
Kamal Gunaratne will become Srilanka's new Defence Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X