கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3,000 சிங்கள ராணுவ வீரர்கள் படுகொலை செய்ததாக ஒப்புதல்- விசாரணைக்கு கருணா ஆஜராக மறுப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: 3,000 சிங்கள ராணுவ வீரர்களை படுகொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக போலீசார் முன்பாக கருணா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய கருணா, நான் கொரோனாவை விட கொடியவன். கொரோனா 13 பேரை கொன்றது.. ஆனால் ஒரே இரவில் 3,000 சிங்கள ராணுவ வீரர்களை கொலை செய்தேன் என பேசினார். இது இலங்கையில் பெரும் சர்ச்சையானது.

Karuna appears before Police for his killed thousands of Sri Lanka Army soldiers speech

இதனையடுத்து சிங்கள அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கருணாவை விமர்சித்து வருகின்றனர். ஆனால் கருணாவோ, இதற்கும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கருணா தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்க போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..கருணாவின் ஒப்புதல் வாக்குமூலம்- கிடுக்குப்பிடி விசாரணை ஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..கருணாவின் ஒப்புதல் வாக்குமூலம்- கிடுக்குப்பிடி விசாரணை

இதனை ஏற்று கருணா இன்று விசாரணைக்கு ஆஜராகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது வழக்கறிஞர் மட்டுமே போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார்.

அப்போது கருணாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

English summary
Forme LTTE Commander Karuna today appeared before for his killed thousands of Sri Lanka Army soldiers speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X