கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துகள் என அவரது மூத்த சகோதரனும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நேற்றைய தினம் வாக்குப் பதிவு முடிந்த உடனே தேர்தல் முடிவுகள் எண்ணத் தொடங்கப்பட்டன.

இதில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார்.

அதிக வாக்குகள்

அதிக வாக்குகள்

சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழர்கள் அமோக ஆதரவை கொடுத்து அதிக வாக்குகளை பெற செய்தனர். தேர்தல் முடிவுகளை உணர்ந்த சஜித் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் கோத்தபயவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ட்விட்டரில் மோடி வாழ்த்து

ட்விட்டரில் மோடி வாழ்த்து

கோத்தபயவுக்கு சிங்களர்கள் ஆதரவும், சஜித்துக்கு தமிழர்கள் ஆதரவும் கை கொடுத்தன. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

அது போல் கோத்தபய ராஜ்பக்சேவின் சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துகள்.

ட்விட்டர்

தாய்நாட்டிற்கு சேவை செய்ய இலங்கை முழுவதும் மேற்கொண்ட பிரசாரம் நன்கு கை கொடுத்துள்ளது. இந்த தேர்தலில் கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு எனது அனுதாபங்கள். தேர்தல் அமைதியாக நடைபெற உதவிய அத்தனை இலங்கை குடிமக்களுக்கும் நன்றி என தனது ட்விட்டரில் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

English summary
Mahinda Rajapaksa in his tweet says that I Congratulate @GotabayaR for his success at the #lka #PressPolls2019. The long campaign trail to serve our motherland again is worth it. Commiserations to @sajithpremadasa for a well, hard fought election. Above all, thankful to the citizens for facilitating a peaceful elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X