கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கமாட்டோம்: மகிந்த ராஜபக்சே

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்த வெளிநாட்டு நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்போவதில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்காக 2019-ல் இந்தியா-இலங்கை- ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் சீனாவின் தூண்டுதலால் இலங்கையில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

Mahinda Rajapaksa explains on Colombo East Container Terminal issue

இந்த நிலையில் ராஜதந்திர ரீதியாக உதவும் என்பதால் கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இலங்கையில் முகாமிட்டுள்ளார்.

"பிறப்புறுப்பை" கம்பியால் தாக்கி.. நிர்பயாவுக்கு நடந்த அதே கொடுமை.. பூசாரியின் கொடூரம்!

இதனிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சே, கொழும்பு துறைமுக நடவடிக்கைகளை வெளிநாடு அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவது இல்லை என கூறினார்.

English summary
Srilanka Prime Minister Mahinda Rajapaksa today clarified on Colombo East Container Terminal issue in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X