கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தேர்தலில் அபார வெற்றி.. 4ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜ்பக்சே (71) இன்று 4-ஆவது முறையாக பிரதமராக மீண்டும் பதவியேற்றார். இலங்கையின் 28ஆவது பிரதமர் ராஜபக்சே ஆவார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜ்பக்சேவின் இலங்கை பொதுஜன கட்சி (எஸ்எல்பிபி) 3-இல் 2 பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

225 உறுப்பினர்கள்

225 உறுப்பினர்கள்

இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு 145 இடங்களும் கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்துள்ளன. 225 உறுப்பினர்களை கொண்டது இலங்கை நாடாளுமன்றமாகும். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே இன்று 4ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதிபரும் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் ராஜபக்சேபதவி பிரமாணம் செய்து கொண்டார்.

ரணில் கட்சி

ரணில் கட்சி

இந்த விழா கெலனியா ராஜமகா விகாராய புத்தர் கோயில் வளாகத்தில் நடந்தது. புதிய நாடாளுமன்றம் வரும் 20-ஆம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இலங்கை அரசியல் கட்சிகளில் பழமையானதான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

நன்றி

நன்றி

வரும் வாரத்தில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி 30 அமைச்சர்கள் மட்டுமே அமைக்க முடியும். தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு ராஜ்பக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

5 லட்சம் வாக்குகள்

5 லட்சம் வாக்குகள்

மேலும் எங்கள் கடந்த ஆட்சி காலங்களில் இலங்கை மக்கள் அதிருப்தி அடையவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் ராஜ்பட்ச தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் ராஜபக்சே 5 லட்சம் வாக்குகளை பெற்றார். இதுவரை எந்த வேட்பாளரும் பெறாத வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

English summary
Mahinda Rajapaksa who win in Srilankan Parliamentary elections is going to take Oath as PM for 4th time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X