கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு லண்டனை சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். அவனுக்கு நன்றி தெரிவித்து ராஜபக்சேவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலின் போது அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி மகிந்த ராஜபக்சேவுக்கு 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.

100 சதவீதம்

100 சதவீதம்

அந்த கடிதத்தில் லண்டனை சேர்ந்த 6 வயது சிறுவனான அப்துல்லா அபுபெய்டு கூறுகையில் நான் அப்துல்லா. லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன். நான் பாதி பிரிட்டிஷ் பாதி இலங்கை. இதனால் என்னுடைய இதயம் இலங்கையின் வளர்ச்சிக்காக 100 சதவீதம் அன்பை கொண்டுள்ளது.

ஆலோசனை

நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து எனது தாய் என்னிடம் கூறியிருந்தார். அதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆலோசனை செய்ய வேண்டும்.

ஆமைகள்

ஆமைகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்துக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. இலங்கையில் உள்ள அழகான கடற்கரைகளை காக்க ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களா. அப்போதுதான் அங்கு ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஆமைகள் பாதுகாப்பாக இருக்கும், என்னை போல.

கடிதம்

கடிதம்

உங்களுக்கு எனது வாழ்த்துகள் என அந்த சிறுவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளான். இதற்கு நன்றி தெரிவித்து ராஜபக்சேவும் ட்வீட் அனுப்பியுள்ளார். அவர் கூறுகையில் இந்த கடிதத்தை எழுதிய 6 வயது சிறுவன் அப்துல்லாவுக்கு எனது நன்றிகள். நான் இந்த கடிதத்தை இன்று காலை பெற்றேன்.

ஊக்கம்

ஊக்கம்

இந்த கடிதம் உத்வேகம் அளிப்பதாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது. நாங்கள் வயதான தலைமுறையினர் என்பதால் இளம் தலைமுறையினர் மீதான பொறுப்புகளை நினைவுப்படுத்தும் விதமாக கடிதம் இருந்தது. ஒரு நாள் உன்னை நேரில் சந்திப்பேன். எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

English summary
Mahinda Rajapaksa in his twitter I would like to thank 6 yr old Abdullah Abubaid for his letter that I received this morning. It has motivated & encouraged me & reminded me of the responsibility we as the older generation have towards our youngsters. I hope to one day meet you in person & wish you the very best.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X