கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவை பதவியேற்றது! டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமானுக்கும் பதவி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றது. தமிழர்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அதிபர் கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

Mahinda Rajapaksas new Cabinet sworn-in

மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்கள் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நிதி, பாதுகாப்பு, மதவிவகாரங்கள் துறைகள் மகிந்த ராஜபக்சே வசம் இருக்கும். நீதித்துறை அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் வலதுசாரி.. என்னை அசைக்க முடியாது.. பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக மறுப்பு.. இஸ்ரேலில் குழப்பம்! நான் வலதுசாரி.. என்னை அசைக்க முடியாது.. பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக மறுப்பு.. இஸ்ரேலில் குழப்பம்!

தோட்ட உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளித் தமிழரான ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக ஈழத் தமிழரான டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்.

மாகாண சபைகளுக்கான அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சராக மகிந்தவின் சகோதரர் சாமல் பராஜபக்ச , தொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

English summary
Fifteen ministers of Srilanka Prime Minister Mahinda Rajapaksa Cabinet sworn-in on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X