கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை: புதிய பிரதமராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் மகிந்த ராஜபக்சே

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சே நாளை மறுநாள் புதிய பிரதமராக பதவி ஏற்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர்- பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய் மக்கள் சக்தி 2-வது இடத்தையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

Mahinda Rajapaksa to be sworn as New Prime Minister of Srilanka on Aug.9

இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்கிறார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமது வெற்றி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபாய மீதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீதும் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கவுரவம் அளிக்கிறது தேர்தல் முடிவுகள் என குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை தேர்தல்: ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றி- ரணில் கட்சி படுதோல்வி இலங்கை தேர்தல்: ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றி- ரணில் கட்சி படுதோல்வி

Recommended Video

    மீண்டும் Mahinda Rajapaksa பிரதமராகிறாரா? | Oneindia Tamil

    இதனிடையே நாளை மறுநாள் கொழும்பில் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்கிறார். அவரது மூத்த சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    English summary
    Mahinda Rajapaksa will be sworn in as the new Prime Minister of Sri Lanka on 9th of August.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X