இலங்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை
கொழும்பு: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி இலங்கை நெய்னார் சமூக நல காப்பக ஏற்பாட்டில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக கூட்டு பிரார்த்தனை வியாழக்கிழமை மாலை உலகம் முழுவதும் நடைபெற்றது.

திரை கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடலை ஒலிபரப்பி கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இதேபோல் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி?
இலங்கை தமிழ் கலைஞர்கள் சங்கம் மற்றும் இலங்கை நெய்னார் சமூக நல காப்பக ஏற்பாட்டில் இது நடத்தப்பட்டது. இலங்கை பாடகர் இர்பான் முஹம்மத் தலைமையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், பிரபல கலைஞர் படத்தயாரிப்பாளர் ஸ்ருதி பிரபா, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனந்தராஜ், ஜெய்கணேஸ், மோகன் மற்றும் இர்ஷாத் மவுலானா ஹஸ்னி முஹம்மத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து சிறப்பித்தனர்.
