கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News Live: இலங்கை கொடூர குண்டுவெடிப்புக்கு 207 பேர் பலி.. ரஜினி, சீமான் கடும் கண்டனம்

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 5 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. மொத்தம் ஆறு இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.

    மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அதன்பின் 6 அணி நேரமா கழித்து இன்னும் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    Newest First Oldest First
    6:04 PM, 21 Apr

    இலங்கை குண்டு வெடிப்பில் 5 வெளிநாட்டவர்கள் பலி என்பது உறுதியானது

    மேலும் பல வெளிநாட்டினர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்

    6:04 PM, 21 Apr

    இலங்கையில் நடந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை

    இலங்கை குண்டுவெடிப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்

    5:58 PM, 21 Apr

    இலங்கை குண்டு வெடிப்புகளில் 207 பேர் பலி

    450க்கும் மேற்பட்டோர் காயம்- காவல்துறை அறிவிப்பு

    5:48 PM, 21 Apr

    இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

    இலங்கை குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா என சீமான் கேள்வி

    5:12 PM, 21 Apr

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது

    இலங்கை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா அறிவிப்பு

    கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை - ஹர்ஷா டி சில்வா

    4:50 PM, 21 Apr

    கடும் துயரத்தை சந்தித்துள்ள இலங்கை மக்களுக்கு துணையாக நிற்போம் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

    குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்

    4:15 PM, 21 Apr

    தெஹிவாலாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது சந்தேக நபர் ஒருவர் கைது
    4:00 PM, 21 Apr

    இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 185 ஆக உயர்வு

    அடுத்தடுத்து நடந்த 8 குண்டுவெடிப்புகளால் பலி எண்ணிக்கை உயர்வு

    3:58 PM, 21 Apr

    இலங்கையில் தாக்குதல்கள் நடந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தோம் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

    மனிதாபிமானமற்ற முறையில் வெடிகுண்டு தாக்குதல் - ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்

    தாக்குதல்களில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

    3:31 PM, 21 Apr

    இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலை அனுமதிக்க முடியாது - மகிந்த ராஜபக்சே

    இலங்கை குண்டுவெடிப்பிற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கண்டனம்

    தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - ராஜபக்சே

    2:51 PM, 21 Apr

    இலங்கையில் எட்டாவதாக இன்னொரு இடத்திலும் குண்டுவெடிப்பு

    தொடரும் குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம்

    2:40 PM, 21 Apr

    இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

    தொடர் குண்டுவெடிப்பால் கொழும்பில் ராணுவம் குவிப்பு

    அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்கள் முடக்கம்

    வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தை தெற்கு பகுதிக்கு செல்ல உத்தரவு

    2:22 PM, 21 Apr

    இலங்கையில் 7வது இடத்தில் குண்டு வெடிப்பு

    கொழும்பு அருகே தேசிய மிருக காட்சி சாலை அருகேயுள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்பு

    உயிரிழப்பு தொடர்பாக தகவல் இல்லை

    1:52 PM, 21 Apr

    இலங்கை குண்டு வெடிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

    இலங்கை மக்களுக்கு பக்கபலமாக இந்தியா துணை நிற்கும்- மோடி

    1:15 PM, 21 Apr

    இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான புரளிகளை நம்பவேண்டாம் என அதிபர் சிறிசேனா வேண்டுகோள்

    நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் – சிறிசேனா

    12:03 PM, 21 Apr

    இலங்கையில் இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து அரசு உத்தரவு

    இலங்கையில் அரசின் அவசர உயர்மட்டக் குழு அவசர ஆலோசனை

    11:57 AM, 21 Apr

    இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஆக உயர்வு

    100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

    11:14 AM, 21 Apr

    இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - சுஷ்மா சுவராஜ்

    தூதரக அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி வருகிறேன் - சுஷ்மா சுவராஜ்

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டிவிட்

    11:09 AM, 21 Apr

    கொழும்பு குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 100 ஆனது.. பேரதிர்ச்சியில் இலங்கை
    10:59 AM, 21 Apr

    சின்ன வயது முதலே அந்த சர்ச்சுக்கு நான் போயுள்ளேன் - ராதிகா

    புனித ஆண்டனி சர்ச் கொழும்பிலேயே மிகவும் பிரபலமானது - ராதிகா

    எப்போதும் கூட்டமாக இருக்கக் கூடிய சர்ச் அது - ராதிகா

    அங்கு குண்டுவெடிப்பு நடந்திருப்பது கேட்கவே கஷ்டமாக உள்ளது - ராதிகா

    போன் செய்து அங்கு கேட்டபோது 2 குண்டு வெடிப்பு நடந்ததாக கூறினர் - ராதிகா

    சின்னமான் ஹோட்டல், சாங்கிரிலால் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது - ராதிகா

    10:58 AM, 21 Apr

    அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை - நடிகை ராதிகா

    2 நாட்களுக்கு முன்பு நான் சின்னமான் ஹோட்டலில் தங்கியிருந்தேன் - ராதிகா

    சகோதர், அவரது குடும்பம், உறவினர்கள் அனைவரும் தங்கியுள்ளனர் - ராதிகா

    எனது உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் - ராதிகா

    ஈஸ்டர் தினத்தின்போது நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது - ராதிகா

    Multiple bomb blast in Sri Lanka Including 4 Churches - LIVE UPDATES

    English summary
    Multiple bomb blast in Sri Lanka Including 4 Churches.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X