கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் பயங்கரம்… ஈஸ்டர் நாளில் குண்டுவெடிப்பு… தாக்குதலுக்கு இலக்கான சீன ஓட்டல்.. காரணம் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் உலகையே உலுக்கிய இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீன ஓட்டலிலும் குண்டு வெடித்துள்ளது, புதிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு கட்டு வப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டகளில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்! 10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்!

    பலி எண்ணிக்கை அதிகரிப்பு

    பலி எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். முக்கிய திருநாளில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதால், இலங்கை நாடே பதற்றத்தில் உள்ளது.

    பொறுப்பேற்கவில்லை

    பொறுப்பேற்கவில்லை

    குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும், யார் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாக வில்லை. இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

    உன்னிப்பாக கவனிப்பு

    உன்னிப்பாக கவனிப்பு

    இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய தூதரிடம் கேட்டு அறிந்தாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    சீன ஓட்டலிலும் குண்டுவெடிப்பு

    சீன ஓட்டலிலும் குண்டுவெடிப்பு

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓட்டல்களில் ஒன்று சீன ஓட்டலாகும். இந்த ஓட்டலிலும் குண்டுகள் வெடித்துள்ளன. ஏற்கனவே இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவுகள் உலகம் அறிந்த ஒன்று.

    உதவி எண்கள் அறிவிப்பு

    உதவி எண்கள் அறிவிப்பு

    இதனிடையே.. குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களை பற்றியோ, காணாமல் போனவர்களை பற்றியோ தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கான தொலை பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. +94777903082, +94112422788 and +94112422789 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    English summary
    Multiple explosions rock Churches, hotels during Easter Sunday service in srilanka including a a china hotel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X