கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Muthiah Muralitharan may be support to Gotabaya Rajapaksa

    கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் தமக்கு மிக முக்கியமான நாள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

    இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். அண்மையில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது பெரும் சர்ச்சையானது.

    தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிப்படையாக முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா முரளிதரன் பேசியதாவது:

    மக்களை கொன்ற புலிகள்

    மக்களை கொன்ற புலிகள்

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பாவி மக்களை அவர்கள் படுகொலை செய்தனர்.

    புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்

    புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்

    அதேநேரத்தில் இலங்கை அரசும் ஒருகட்டத்தில் தவறு செய்தது. பின்னர் விடுதலைப் புலிகளும் தவறு செய்தனர். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான ஒருநாள்.

    விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சிவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி

    அடுத்த அதிபர் யார்?

    அடுத்த அதிபர் யார்?

    இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் ஆட்சி செய்ய வேண்டும். அவரே அடுத்த அதிபராகவும் வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்.

    அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு?

    அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு?

    மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தகுதியான ஒரு தலைவருக்குத்தான் அதிபர் தேர்தலில் நானும் வாக்களிப்பேன். இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்.

    English summary
    Former Cricket Player Muthiah Muralitharan may be support to Gotabaya Rajapaksa in upcoming the Srilankan Presidential Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X