கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈழத்தில் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரன் - வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

கொழும்பு: ஈழத்தில் காணாமல் போன உறவுகள் நடத்திய போராட்டம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அலட்சியமாக சொன்ன பழைய வீடியோ பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக்கப்படுகிறது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

இதற்கு உலகத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்ததை மகிழ்ச்சியான தருணம் என கூறியவர் முத்தையா முரளிதரன். போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர்.. அதனால் அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து.

முரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி? தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்!முரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி? தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்!

முத்தையா முரளிதரன் விளக்கம்

முத்தையா முரளிதரன் விளக்கம்

இது தொடர்பாக முத்தையா முரளிதரன் ஒரு விளக்கமும் கொடுத்திருந்தார். அதில் தாம் ஒரு தமிழனாக பிறந்தது குற்றமா? என கேள்வி கேட்டிருந்தார். மேலும் மலையகத்தில் பிறந்த தாமும் ஜேவிபிக்கும் இலங்கை அரசுக்குமான யுத்தத்தில் பாதிக்கப்பட்டவன் என்றும் பதிவு செய்திருந்தார் முரளிதரன். இருப்பினும் ஈழத்தில் சிங்கள ராணுவம் நிகழ்த்திய் இனப்படுகொலை குறித்து முத்தையா முரளிதரன் எதுவும் சொல்லவில்லை.

யாழ்ப்பாணத்தில் கேமரூன்

யாழ்ப்பாணத்தில் கேமரூன்

இதனிடையே இறுதி கட்டப் போரின் போது சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போரை கொச்சைப்படுத்தும் விதமாக முத்தையா முரளிதரன் அளித்த பழைய பேட்டி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார். அங்கு ஈழத் தமிழர்களை சந்தித்து அவர்களது துயரங்களைக் கேட்டறிந்தார். அப்போது சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை மீட்டு தரக் கோரி கேமரூனிடம் பெண்கள் கதறி அழுது கோரிக்கை வைத்தனர். கேமரூனின் யாழ்ப்பாண பயணம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முரளியின் பேட்டி இதுதான்

அந்த சூழ்நிலையில் 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ல் Channel 4 News-க்கு முத்தையா முரளிதரன் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் கூறப்பட்டவைதான் இப்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் முரளிதரன் கூறியுள்ளதாவது: யுத்தம் இரு பக்கங்களைக் கொண்ட சமராகும். எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே எங்களுக்கும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதேநேரத்தில் யாராலும் அதை கண்டுபிடிக்கவும் இயலாது. ஆகவே உங்களிடம் வந்து அழுத அந்த தாய்மாருக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தவறான தகவல் தரப்பட்டது

தவறான தகவல் தரப்பட்டது

கேமரூனுக்கு தவறான தகவல்களை தந்துள்ளனர். ஏனெனில் கேமரூன் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கோ இலங்கைக்கோ வந்தது இல்லை. அவர் சிறுவயதில் இலங்கைக்கு வந்தாரோ என்னவோ எனக்கு தெரியாது. என்ன நடந்தது? ஏது நடந்தது என்று அவருக்கு மற்றவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.அதனால்தான் அவர் யாழ்ப்பாணம் சென்று பார்க்க விரும்பினார். 20,30 தாய்மார்கள் வந்து அழுவதால் அதுதான் உண்மை என்று ஆகிவிடாது. உங்களுக்கு தெரியாது. ஏனென்றால் அவர்கள் கூட பிழையான விஷயங்களை பரப்புவதற்கு காரணமானவர்களாகவும் இருக்கலாம். ஆகவே இதுதான் உண்மை என அறிவது கடினம். இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதுதான் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மறப்போம்

இதே பேட்டியின் முடிவில், 1977 இலங்கை இனக்கலவரத்தில் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற்காக பழையதை எல்லாம் தோண்டிக் கொண்டிருக்க முடியாது. முடிந்து போனவை முடிந்ததாக இருக்க வேண்டும். யேசுநாதர் கூட மறப்போம் மன்னிப்போம் என்கிறார் என்றும் முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார்.

English summary
Muttiah Muralitharan's old interview video against Eelam Tamils Protest went viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X