கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை காலை இந்தியா வருகிறார்.இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே கடந்த சளி தினங்களுக்கு முன் பதவி ஏற்கிறார். இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

New Srilanka President Gotabaya Rajapakse will be coming to India tomorrow

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்தார். புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை காலை இந்தியா வருகிறார்.இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இந்தியா வரும் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். 30ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் அவர் வெவ்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கிறார்கள்.அதிபர் ஆன பின் கோத்தபய ராஜபக்சேவின் முதல் வெளிநாட்டு பயணமாகும் இது.

அங்கு அதிபர் தேர்தல் முடிவு வந்த மறுநாளே இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அங்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். கோத்தபய ராஜபக்சே-வை சந்தித்துப் பேசினார். இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள்.

அதன்பின் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டு நாளை, இந்தியா வர இருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்சே சீனாவிற்கு நெருக்கமானவர். சீனாவின் தலைவர்களுக்கும் ராணுவத்திற்கும் இவர் செல்லப்பிள்ளை கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

English summary
New Srilanka President Gotabaya Rajapakse will be coming to India tomorrow: Will meet PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X