கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை.. தீவிரவாதத்தை இலங்கையே ஒடுக்கும்- ராஜபக்ச

Google Oneindia Tamil News

Recommended Video

    தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை

    கொழும்பு: தேசிய பாதுகாப்பு படையை (என்எஸ்ஜி) இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தீவிரவாதத்தை இலங்கையே ஒடுக்கும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். தீவிரவாதத்தை ஒடுக்க இலங்கை முயற்சித்து வருகிறது.

    இலங்கைக்கு உதவ உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. அந்த வகையில் இலங்கையில் தீவிரவாத தாக்குதலை சமாளிக்க இந்தியாவில் இருந்து தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) விரைகிறது. இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிரவாத தடுப்பு பிரிவினர் இலங்கை செல்ல தயாராக உள்ளனர்.

    உலகையே உலுக்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. மூளையாக செயல்பட்ட மூவர் சுட்டுக் கொலை.. காவல் துறைஉலகையே உலுக்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. மூளையாக செயல்பட்ட மூவர் சுட்டுக் கொலை.. காவல் துறை

    முன்னாள் அதிபர் பேட்டி

    முன்னாள் அதிபர் பேட்டி

    இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியாவின் உதவி தேவையில்லை என முன்னாள் அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

    நன்றி

    நன்றி

    அதில் அவர் கூறுகையில் உதவி செய்ய முன் வந்திருக்கும் இந்தியாவுக்கு நன்றி. ஆனால் எங்கள் மண்ணில் வெளிநாட்டு படைகளான (இந்தியா) தேசிய பாதுகாப்பு படையினர் தேவையில்லை.

    திறமை

    திறமை

    இந்தியா உதவியாக இருந்து வருகிறது. ஆனால் தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்புவது தேவையில்லாதது. வெளிநாட்டு வீரர்கள் எங்களுக்கு தேவையில்லை. எங்களது ராணுவத்துக்கு தீவிரவாதத்தை எதிர்க்கும் அளவுக்கு போதிய திறமை உள்ளது. அவர்களுக்கு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்தால் போதுமானது.

    வாக்கு வங்கி

    வாக்கு வங்கி

    சிறிசேனாவும் ரணிலும் தேசிய நலனில் அரசியல் விளையாடுவதில் பிஸியாக உள்ளனர். தீவிரவாதிகள் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வாக்குகள் மற்றும் வாக்கு வங்கி குறித்து கவலைப்படுவதால் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர் என்றார் ராஜபக்ச.

    English summary
    Mahinda Rajapaksa, said he does not want any foreign forces, like the National Security Guard, on its soil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X