கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்வதேச அளவில் இந்தியா வலிமையாக இருக்க வெளிநாடு வாழ் இந்தியர்களே காரணம்- மோடி

Google Oneindia Tamil News

கொழும்பு: சர்வதேச அளவில் இந்தியா வலிமையாக இருக்க வெளிநாடு வாழ் இந்தியர்களே காரணம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கொழும்பில் இந்திய தூதரின் இல்லத்தில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் மோடியை சந்தித்தனர்.

PM Modi addresses Indians in Sri Lanka

இச்சந்திப்பை தொடர்ந்து இலங்கை வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் அவர்களிடையே பேசிய மோடி, முடிவடைந்த லோக்சபா தேர்தலில் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின் அதிக அளவிலான பேர் வாக்களித்துள்ளனர்.

ஜனநாயகம் என்பது இந்தியாவின் ஆன்மா; கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை பயணம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டிருந்தார். அதில், 10 நாட்களில் சிறிசேனாவை 2-வது முறையாக சந்தித்துள்ளேன்.

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் தீவிரவாதம் என்பது ஒரு கூட்டு அச்சுறுத்தல். இலங்கையின் பாதுகாப்பான எதிர்காலத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்திருக்கிறார்.

தெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள் தெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்

இதனையடுத்து கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வழியனுப்பி வைத்தார். கொழும்பில் இருந்து இந்தியா திரும்பும் பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்துகிறார்.

English summary
Prime Minsiter Modi told Indian community in Srilanka, "fter independence, highest voter-turnout took place in the recent elections. It is a matter of prestige".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X