கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொழும்பு தேவாலயத்தில் ஈஸ்டர் நாள் தாக்குதலில் பலியானோருக்கு மோடி அஞ்சலி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் நாள் தாக்குதலில் பலியானோருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற போது அந்த விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். ஆனால் நேபாளம், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள் மீதான இந்திய அரசின் பிடி 5 ஆண்டுகளில் தளர்ந்தது என்பதுதான் யதார்த்தம்.

PM Modi to visit Sri Lanka today

மோடி ஆட்சிக் காலத்தின் கடைசியில் மாலத்தீவில் இந்திய ஆதரவு அதிபர் வெற்றி பெற்றார் இதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலான ஒரே ஆறுதலாக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பிரதமராக பதவியேற்ற மோடி இம்முறை வங்கக் கடல் சார்பு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெக்கின் தலைவர்களை அழைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமது 2-வது பதவி காலத்தில் முதல் முறையாக மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார் மோடி. இதைத் தொடர்ந்து இன்று இலங்கைக்கு குறுகிய பயணமாக சென்றடைந்தார் மோடி.

அவரை கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார். முன்னதாக மரபுகளை மீறி மோடியை அதிபர் சிறிசேனாவே கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்க உள்ளதாக கூறப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்ற மோடி, ஈஸ்டர் நாள் தாக்குதலில் பலியானோருக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் மோடிக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார் மோடி.

English summary
Prime Minister Narendra Modi will visit Sri Lanka today to express solidarity with the victims of Easter Sunday attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X