கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் துவங்கியது தபால் வாக்குப் பதிவு!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தபால் வாக்குகள் இன்று தொடங்கியது.

இலங்கையில் 8ஆவது நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபட்ச கடந்த மார்ச் 2-ஆம் தேதி கலைத்தார். இதையடுத்து ஏப்ரல் 25-ஆம் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையக் குழு வெளியிட்டது.

Postal Votes begin for Srilanka Parliamentary elections

கொரோனா ஊரடங்கு அமலானதால் ஏப்ரல் 25-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் ஜூன் 20-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்கு மீண்டும் 3ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கான தபால் வாக்குகள் இன்று தொடங்கிய நிலையில் இந்த மாதம் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தபால் ஓட்டுகளை செலுத்த தகுதியுடையவராகியுள்ளனர்.

சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி!சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி!

கொரோனா வழக்குகள் அதிகரித்ததால் ஒரு பிரிவில் வாக்கு பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்டகாடு மறுவாழ்வு மையத்தில் இதுவரை 492 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மீண்டும் ஒரு முறை தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இலங்கை தேர்தல் ஆணையமோ அதை மறுத்துள்ளது. வரும் நாட்களில் இலங்கையின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் என ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார்.

English summary
Postal Votes begins today for Srilanka Parlimentary elections amid coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X