India
 • search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நாளைக்கு 2 வேளை தான் சோறு! இது தொடக்கம் தான்.. இனிமேல் தான் எல்லாமே.! ரணில் விக்கிரமசிங்கே பீதி!

Google Oneindia Tamil News

கொழும்பு : இலங்கை தற்போது நெருக்கடியின் தொடக்க நிலையில்தான் உள்ளது எனவும், இலங்கை மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று குறைந்த நாட்களே ஆகியுள்ள நிலையில், ரணில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று கூறி அவருக்கு எதிராக ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து கண்ட போர் உள்ளிட்ட நெருக்கடியை விட தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை மிகக் கடுமையான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை தூதர், முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு! மீனவர் விவகாரம் குறித்து பேச்சு இந்தியாவுக்கான இலங்கை தூதர், முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு! மீனவர் விவகாரம் குறித்து பேச்சு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜபக்ச குடும்பத்தின் நல்ல நண்பர் என்பதால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறியதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதே நேரத்தில் நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளதாகவும், இலங்கை மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை நெருக்கடி

இலங்கை நெருக்கடி

இது தொடர்பாக இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரணில்," இலங்கை தற்போது நெருக்கடியின் தொடக்க நிலையில்தான் உள்ளது. மோசமான விஷயங்கள் இனிதான் வரப்போகிறது. மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும். பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய, இலங்கை அரசு நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

Recommended Video

  China பெட்ரோலிய பொருட்களுக்கு வரி விதிக்கும் Pakistan #World
  நாட்டின் எதிர்காலம்

  நாட்டின் எதிர்காலம்

  சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. அதுகிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் . இலங்கை தனது தவறுக்காக மன்னிப்பு கோருவதும், உதவிக்காக நண்பர்களை உருவாக்குவதும் அவசியம் . தற்போது எரிபொருளிற்கான வரிசைகள் இல்லை பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை. தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன் என்பது உங்களில் பலருக்கு தெரியாது.

  இந்தியா உதவி

  இந்தியா உதவி

  பெரும்போகத்திற்கான போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியா உதவ முன்வந்துள்ளது. ஏனைய நாடுகளும் உதவுகின்றன. இலங்கை தனது தவறுக்காக மன்னிப்பு கோருவதும், உதவிக்காக நண்பர்களை உருவாக்குவதும் அவசியம் இலங்கையை இரண்டு பிரச்னைகள் பாதிக்கின்றன. ஒன்று ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது, அது பொருளாதார பிரச்னை. இதன் தொடர்ச்சியாக அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது என உருக்கமாக பேசியுள்ளார்.

  English summary
  Prime Minister Ranil Wickremesinghe has said that Sri Lanka is currently in the early stages of a crisis and that the Sri Lankan people will eat only twice a day.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X