கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை.. மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி!

இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சில வாரங்கள் முன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே தான்தான் பிரதமர் என்று கூறினார்.

Rajapaksa has no power to take decisions as Sri Lanka Prime Minister, rules Court

அதே சமயம் ராஜபக்சேவிற்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை. இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. பெரும்பான்மை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

ஆனால் ராஜபக்சே தொடர்ந்து தான்தான் பிரதமர் என்கிறார். அதேபோல் ரணிலும் தன்னை பிரதமர் என்று கூறி வருகிறார். இதனால் அங்கு தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ராஜபக்சேவை பதவியில் நீக்கும்படி ரணில் விக்ரமசிங்கே சார்பாக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மொத்தம் 122 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக மனு வழங்கியதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த உத்தரவு வரும்வரை ராஜபக்சவிற்கு பிரதமருக்கு உரிய அதிகாரம் கிடையாது, அவர் பிரதமராக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது.

English summary
Rajapaksa has no power to take decisions as Sri Lanka Prime Minister, rules Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X