கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சபாநாயகர் ரணிலுக்கு ஆதரவு... இலங்கையில் ராணுவம் குவிப்பு

    கொழும்பு: ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகளை 1008-லிருந்து 10-ஆக குறைத்தது இலங்கை அரசு. பிரதமர் இல்லத்துக்கு செல்லும் மின்சாரம், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இலங்கையில் ஏற்கெனவே அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே கடும் அதிகார போக்கு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு ராஜபக்சேவை நியமித்தார் சிறிசேனா.

    Ranils security reduced from 1008 to 10

    இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனினும் அதிக பெரும்பான்மை கொண்ட தான்தான் பிரதமர் என்று ரணில் கூறுகிறார். இந்த நிலையில் ரணிலின் செயலாளரை நீக்கம் செய்தது இலங்கை அரசு. இதைத் தொடர்ந்து ரணிலை பிரதமர் இல்லத்திலிருந்து காலி செய்யுமாறும் அரசு கோரிக்கை விடுத்தது.

    [இலங்கையில் தொடங்கியது குதிரை பேரம்.. எம்பிக்களை இழுக்க ராஜபக்சே மும்முரம் ]

    இந்நிலையில் தான்தான் பிரதமர் என்று ரணில் கூறுவதால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட 1008 பாதுகாப்பு அதிகாரிகளை 10-ஆக குறைத்தது.

    இன்று ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தை ரணில் காலி செய்வதற்காக அந்த இல்லத்திலிருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    The security detail of UNP Leader Ranil Wickremesinghe had been reduced to 10 personnel from 1,008 on the directions of the IGP, Police said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X