கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா

Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியா நிறுத்த விரும்பியது இல்லை- அதனை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Recommended Video

    கடைசி புல்லட் வரை எதிர்கொண்டார் பிரபாகரன்-சரத் பொன்சேகா

    சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத் பொன்சேகா கூறியதாவது:

    விடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன் விடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்

    தீர்மானிக்கும் சக்தி

    தீர்மானிக்கும் சக்தி

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார்.

    சர்வதேச நாடுகள் உதவி

    சர்வதேச நாடுகள் உதவி

    விடுதலைப் புலிகளின் கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசியல்வாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். பிரபாகரனும் அப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த வடக்கும் கிழகும் அவரது கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்திருந்தன.

    யுத்த நிறுத்த முயற்சி

    யுத்த நிறுத்த முயற்சி

    2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்கு உலக நாடுகள் அந்த போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்பு காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு அப்போது வேறானதாக இருந்தது.

    இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்

    இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்

    இந்தியாவைப் பொறுத்தவரை புலிகளுடனான யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விரும்பவும் இல்லை- ஏற்கவும் இல்லை. அதற்கு எதிராக விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடித்தேவிடலாம் என்பதாக மட்டுமே இந்தியாவின் நிலைப்பாடு இருந்தது. தாங்கள் சொன்னதை பிரபாகரன் கேட்கவில்லை என்கிற கோபம் முதலில் இந்தியாவுக்கு இருந்தது. பின்னர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால் அந்த கோபம் மிக அதிகமாக இந்தியாவுக்கு இருந்தது. இவ்வாறு சரத்பொன்சேகா கூறினார்.

    English summary
    Srilanka Former Army commander Sarath Fonseka hails LTTE Chief Prabhakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X