கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது ஏன்? நாடாளுமன்றத்தில், அமைச்சர் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை தாக்குதலின் பின்னணியில் யார்?.. வெளியானது வீடியோ ஆதாரம்

    கொழும்பு: கிறிஸ்தவ வலதுசாரிகள் தாக்குதலுக்கு பதிலடியாக, இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

    ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் உள்ள, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை, குறிவைத்து தற்கொலைப் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில், 321 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று கூடி, இந்த சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தியது.

    ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி... 24 மணி நேரமும் கண்காணிப்புராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி... 24 மணி நேரமும் கண்காணிப்பு

    பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்

    பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்

    இதில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர், ருவான் விஜேவர்த்தன பேசுகையில், கிரைஸ்ட் சர்ச் நகரில் மசூதிகளை குறிவைத்து வலதுசாரி அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இலங்கையில், தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய உளவு அமைப்பு

    இந்திய உளவு அமைப்பு

    இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக, இந்திய உளவுத்துறையும் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் மேலும் அவர், கூறுகையில், இலங்கை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை, 321, என்று அதிகரித்துள்ளது. இதில் 38 பேர் வெளிநாட்டினர் என்று தெரிவித்துள்ளார்.

    கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்

    கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்

    நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த, கிறிஸ்தவ வலதுசாரி தீவிரவாதிகள், அங்கு தொழுகை நடத்த வந்த முஸ்லீம்களை நோக்கி, சரமாரியாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். இந்த சம்பவம் மார்ச் 15ம் தேதி நடைபெற்றது.

    பதிலடி தாக்குதல்

    பதிலடி தாக்குதல்

    கிறிஸ்தவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள்தான், இந்த தாக்குதலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், அந்த தாக்குதலுக்கு பதிலடியாக கிறிஸ்தவர்கள் மீது, இலங்கையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Sri Lanka Deputy Defence Minister uwan Wijewardene says, Initial probe shows Sri Lanka attacks were 'retaliation for Christchurch'.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X