கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிலரை அடையாளம் கண்டுள்ளோம்.. குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்.. இலங்கை பிரதமர் ரணில் அதிரடி!

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான சில நபர்களை அடையாளம் கண்டு இருக்கிறோம், என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா? போலீஸ் வெளியிட்ட வீடியோ

    கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான சில நபர்களை அடையாளம் கண்டு இருக்கிறோம், விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இரண்டு நாட்களுக்கு ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

    இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த தாக்குதல் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி அளித்துள்ளார்.

    இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்? மர்மம் என்ன? இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்? மர்மம் என்ன?

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    ரணில் விக்ரமசிங்கே தனது பேட்டியில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. விசாரணை சரியான திசையில் செல்வதாக தெரிகிறது.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    குற்றவாளிகளை நெருங்கி வருகிறோம். சில நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு இருக்கிறோம். விரைவில் அனைவரையும் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன். இலங்கைக்கு நிறைய நாடுகள் உதவி வருகிறது. இலங்கைக்கு உதவும் நாடுகள் அனைத்திற்கும் நன்றிகள்.

    எப்போதும் ஒருமைப்பாடு

    எப்போதும் ஒருமைப்பாடு

    இலங்கையில் மத ஒருமைப்பாடு நிலவி வருகிறது. அதை குலைக்க முடியாது. அனைத்து மதத்தினரும் எங்களிடம் தொடர்பு கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். எந்த தாக்குதலாலும் இலங்கையில் எங்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது, அவர்களால் எங்களிடம் மத பிளவை ஏற்படுத்த முடியாது. அதை பற்றி பேசுவது கூட அவசியமற்றது.

    இலங்கை எப்படி

    இலங்கை எப்படி

    இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேபோல் சர்வதேச போலீஸ் இலங்கையில் விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    English summary
    Sri Lanka Blast: We will find the bombers soon those who are responsible, says SL PM Ranil Wickremesinghe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X