கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து! கொழும்பில் சிறப்பு வழிபாடு!

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் நடந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

    கொழும்பு: பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் 200க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பேராயர் மால்கம் ரஞ்சித் பங்கேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் இலக்கு வைத்து மனித வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டன. ஐ.எஸ். இயக்கம் நடத்திய இப்பயங்கரவாத தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டனர்.

    sri lanka churches shut on sunday

    இதனையடுத்து இலங்கை முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமையன்று மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகையை ரத்து செய்யவும் முதலில் பரிந்துரைக்கப்பட்டது.

    அதிபர் தேர்தல்: கோத்தபாயவுக்கு அமெரிக்கா ஆதரவு? குடியுரிமையை வாபஸ் பெற்றது?அதிபர் தேர்தல்: கோத்தபாயவுக்கு அமெரிக்கா ஆதரவு? குடியுரிமையை வாபஸ் பெற்றது?

    பின்னர் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொழுகைகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன. தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்தில் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்றார். பேராயர் மால்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்கு உருக்கமாக உரையாற்றினர்.

    அப்போது பலி கொள்ளப்பட்டோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

    English summary
    Sri Lanka’s Catholics awoke to celebrate Sunday mass in their homes by a televised broadcast as churches across the island nation shut over fears of militant attacks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X