கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவி இந்தியாவில் தஞ்சம்?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளில் ஒருவரின் மனைவி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள்.

Sri Lanka Easter Sunday Suicide Bombers wife may have fled to India?

சர்வதேசத்தையே அதிரச் செய்த இந்த பயங்கரவாத செயலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. இந்த இயக்கத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தாக்குதல்களை நடத்தியதும் அம்பலமானது.

இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரின் மனைவியான புலசாந்தினி ராஜேந்திரன் என்பவர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார் என்கின்றன இலங்கை தகவல்கள்.

5 லட்சம் பேர்.. அடுத்தடுத்து இ-பாஸ் கோரி விண்ணப்பம்.. வேகமாக சென்னைக்கு திரும்பும் மக்கள்.. டிவிஸ்ட்5 லட்சம் பேர்.. அடுத்தடுத்து இ-பாஸ் கோரி விண்ணப்பம்.. வேகமாக சென்னைக்கு திரும்பும் மக்கள்.. டிவிஸ்ட்

கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அந்த பெண் நுழைந்துள்ளதாகவும் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பெண்ணை இலங்கைக்கு அனுப்பி வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
Srilanka media Reports said that Sri Lanka Easter Sunday Suicide Bomber's wife may have fled to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X