கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குண்டுவெடிப்புக்கு பின் 200 இஸ்லாமிய மதகுருக்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இலங்கை

Google Oneindia Tamil News

கொழும்பு : ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு இலங்கை அரசு 200 இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட 600 வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது.

இலங்கையில கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Sri Lanka expelled 200 Islamic clerics after Easter attacks blamed on a local jihadi group

இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை உள்ளூர் ஜிகாதி குழுக்கள் செய்திருப்பதாக கூறிய இலங்கை அரசு, அந்த குழுவினரை தேடிதேடி பிடித்து கைது செய்து வருகிறது.

இந்நிலையில் ஜிகாதி குழு உருவாகும் பயத்தின் காரணமாக, இலங்கை அரசு, தங்கள் நாட்டில் விசா காலம் முடிந்த பின் தங்கியிருந்த இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியற்றி வருகிறது.

வெனிசுலாவில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர்.. 7 ராணுவ வீரர்கள் பலிவெனிசுலாவில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர்.. 7 ராணுவ வீரர்கள் பலி

இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் வஜிரா அபேவர்தனா கூறுகையில், "இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில விசா முடிந்து தங்கியிருந்த 200 இஸ்லாமிய மதகுருமார்கள் உள்பட 600 வெளிநாட்டவர்களை வெளியேற்றி உள்ளோம். இப்போது உள்ள சூழ்நிலையை கருத்திக்கொண்டு இனி மதகுருமார்கள் இலங்கைக்குள் வருவதற்காக விசா நிபந்தனைகளை கடுமையாக்குவோம்" என்றார்

English summary
Sri Lanka expelled over 600 foreign nationals, including around 200 Islamic clerics who have overstayed their visas since the Easter attacks were from Bangladesh, India, Maldives and Pakistan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X